Header Ads

சுரங்கம் வெட்டி பிரம்மபுத்திரா நதியை இந்தியாவுக்கு வரவிடாமல் செய்ய சீனா பயங்கர திட்டம்!


உலகிலேயே மிகப்பெரிய சுரங்கத்தை வெட்டி, அதன் மூலம் பிரம்மபுத்திரா நதியை இந்தியாவுக்கு வரவிடாமல் திசை திருப்பும் பயங்கர திட்டத்தை சீனா தீட்டியுள்ளது.


சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தில் உருவாகும் பிரம்மபுத்திரா, அந்த நாட்டில் யர்லாங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத்தில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைக் கடந்து வங்கதேசத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இந்த நதிக்கு அருகே சுமார் ஆயிரம் கி.மீ. நீளமுள்ள சுரங்கத்தை வெட்டி அதன் மூலம் பிரம்மபுத்திரா நதியை இந்தியாவுக்குள் வராமல், திசை திருப்பும் திட்டத்தை சீனா பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நூற்றுக்கணக்கான பொறியாளர்கள் ஆய்வு செய்து ஆய்வு முடிவை சீன அரசிடம் வழங்கியுள்ளனர். ஒரு வேளை இந்த திட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், இந்தியாவின் வட மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதே சமயம், சுரங்கம் வழியாக அதிகப்படியான நீரை திசை திருப்பும் போது வெள்ளம் ஏற்பட நேர்ந்தால், அதனாலும் இந்தியாவின் வடமாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.