Header Ads

பிளாஸ்டிக் சிகிச்சை செய்து கொண்டமையால், இளைஞர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..!


பிளாஸ்டிக்   சிகிச்சை   செய்து  கொண்டமையால்  வாழ்க்கையில்   திருப்பம் !

பிளாஸ்டிக் சிகிச்சை செய்துகொண்ட  நபர் ஒருவரை அவரது தாயாரால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போன சம்பவம் ஒன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்த  22 வயதுடைய நோப்பஜித் மோன்லின் என்பவர் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவரது தாடைகள் விலகியிருந்தன. முகம் முழுவதும் புள்ளிகள். பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் இருந்ததால் யாருடனும் பேசாது தனிமையிலிருப்பார்.
 தென் கொரியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் போட்டியொன்றில்  கலந்துகொண்ட மோன்லினுக்கு, பிளாஸ்டிக் சிகிச்சை செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மோன்லினை  உடனே தென் கொரியாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே மூன்று மாதங்கள் பலவித அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தாடை, முன் நெற்றி, இமைகள் போன்றவை சரிசெய்யப்பட்டன. தோலுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
முழுமையாக மாற்றம் அடைந்த பிறகு, மோன்லினைக் கண்ணாடியில் காட்டினார்கள். அவருக்குத் தன்னையே அடையாளம் தெரியவில்லை. மகிழ்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. ப
பின்னர் மோன்லின் தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டதோடு,  ஓர் உணவகத்துக்கு அவரது அம்மாவும் வரவழைக்கப்பட்டார்.
அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டது. சிரித்துக்கொண்டே வந்த மோன்லினை அவரது அம்மாவுக்கே அடையாளம் தெரியவில்லை. அம்மாவுக்குக் கை கொடுத்தார், கட்டிப்பிடித்தார். அப்போதும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் குடும்ப விஷயங்களைக் கேட்டபோதுதான் தன் மகன் என்பதை நம்பினார் மோன்லினின் தாயார்.
'என் மகனை அப்போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன். அவனது தோற்றம் குறித்து ஒருநாளும் நான் வருந்தியதில்லை. அவனுக்கு ரொம்ப நல்ல குணம்' என்று சொல்லும்போதே கதறி அழுதுவிட்டார்.
'எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. அம்மாவுக்கு எப்படித் தெரியும்? இன்று ஏராளமானவர்கள் தாங்களாகவே வந்து என்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறார்கள். தென் கொரிய மாடல் போலிருப்பதால் மாடலிங் வாய்ப்புகளும் தேடிவருகின்றன என்று மோன்லின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.