Header Ads

சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இளைஞர்..! அயலவர்களால் நையப்புடைப்பு..

புத்தளம் பகுதியில் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சிறுமி நேற்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞர் இவ்வாறு பாலியல் வன்புணர்வினை மேற்கொண்டுள்ளார். குறித்த சிறுமியின் மாமா வீட்டிற்கு வருகை தருவதை தெரிந்துக்கொண்ட புத்தளம் பாலாவியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதன்போது மாமாவினால் மடக்கிப்பிடிக்கப்பட்டதாகவும், அயலவர்களால் குறித்த இளைஞர் இதன்போது தாக்கப்பட்டுள்ளார் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.