Header Ads

கோடீஸ்வர பிச்சைகாரரர்கள் சிக்கினர்.. எங்கு தெரியுமா..?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா வருகையை ஒட்டி, தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத் புது பொலிவு பெற்று வருகிறது. அத்துடன் அந்த நகரில் பிச்சை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ தராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்து கொண்டு இருந்தவர்களை மீட்ட அதிகாரிகள் அவர்களை மறுவாழ்வு இல்லங்களில் சேர்த்து வருகின்றனர். அப்போது சந்தித்த சிக்கல்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது..

கணவர் இறந்ததால் மன உளச்சல்
ஐதராபாத் நகரின் புறநகர் பகுதியில் லாங்கர் ஹூஸ் என்ற தர்காவை சுற்றி ஏராளமான பெண்கள் பிச்சை எடுத்து வந்தனர். அவர்களை மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தோம். அவர்களின் பின்னணி குறித்து விசாரித்த போது, இரண்டு பெண்கள் எங்களை மிரள வைத்து விட்டனர். இரண்டு பேரும் மிக சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினர்.

அவர்களில் ஒருவர் பெயர் பர்சோனா, 51. அவர் வர்த்த மேலாண்மை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். லண்டனில் பணியாற்றியவர், சில ஆண்டுகளுக்கு முன் சொந்த நாடு திரும்பி உள்ளார். அவரது மகன் அமெரிக்காவில் கட்டுமான நிபுணராக பணியாற்றி வருகிறார். பர்சோனாவிற்கு ஐ தராபாத்தில் அமீர்பெட் என்ற இடத்தில் சொந்தமாக பங்களா உள்ளது. சில காலத்திற்கு முன் அவரது கணவர் இறந்து விட்டார். அப்போது மிகவும் மன உளச்சளலுக்கு காரணமானவர் சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தர்காவில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது மகன் ஏற்கனவே ஐதராபாத் வந்து தாயை பல இடங்களில் தேடியுள்ளார். அந்த மகனிடம் தாயை ஒப்படைத்தோம். இருப்பினும் அந்த பெண், தர்காவில் பிச்சை எடுத்தே ஆகவேண்டும் என மிகவும் பிடிவாதம் பிடித்தார். அவரது மகனிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

ஏமாற்றிய சகோதரர்கள்
மற்றொரு பெண்ணின் பெயர் ராபியா பசீரா, 44. இவரும் தர்காவை சுற்றியுள்ள பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவர், அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்றவர். ஐதராபாத் நகரில் பல்வேறு சொத்துக்கள் அவர் பெயரில் உள்ளன. ஆனால், அவரது சகோதரர்கள் அவரை ஏமாற்றி சொத்துக்களை பறித்து விட்டனர். மிகவும் மன உளச்சலுக்கு ஆளான அவர், சிலரின் ஆலோசனை பெயரில் தர்கா பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை, உறவினர்களிடம் ஒப்படைத்தோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.