Header Ads

தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலை மாணவர்களின் நிலைப்பாடு இதுதான்..!


அரசியற் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலை மாணவர்களின் நிலைப்பாடு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்றும் அதே போல் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக உழைக்கவேண்டும் என்றும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார்.
பல்கலைகழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மாணவர் ஒன்றியத் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
”தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருந்த கதவடைப்புப் போராட்டத்துடன் பீடங்களின் வகுப்புப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அரசியல் கைதிகளுக்கு ஆதரவான குறித்த போராட்டத்தை மாணவர்கள் நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 13ம் திகதி வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 13ம் திகதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைகழகத்திற்குள் அமைதியான முறையில் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்துவோம். அதேபோல் அரசியல் கைதிகளுடைய விடுதலையின் தேவையை உணர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து போராட முன்வரவேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழ் அரசியற் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு வடிவிலான போராட்டங்களினை முன்னெடுத்திருந்தமை இங்கே குறிபிடத்தக்கதாகும்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.