போலீசாருக்கு அறை தர மறுத்த ஓட்டல் நிர்வாகம், ஆத்திரத்தில் ஊழியர்களை தாக்கிய போலீசார்..
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்புக்காக சென்ற போலீசார் பணி முடிவடைந்ததும் அங்குள்ள ஓட்டலில் தங்குவதற்காக அறை கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டல் நிர்வாகம் அறை இல்லை என கூறிவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் ஓட்டல் ஊழியரை சரமாறியாக தாக்கி உள்ளனர்.
இது குறித்து ஓட்டல் மேலாளர் கூறுகையில்,
ஓட்டலில் அறை கேட்ட போலீசார் அறை இல்லை என்று கூறியதும் மற்ற வாடிக்கையாளர்களிடம் தவறாக நடக்க முயன்றனர். மேலும் ஓட்டலில் அறையில் தங்கி உள்ள வாடிக்கையாளர்களை வெளியே இழுத்து வந்து சரமாறியாக தாக்கினர். இதனை தட்டிக்கேட்ட ஓட்டல் ஊழியர்களையும் போலீசார் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் சிங் கூறிகையில்,
விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த பிறகு சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்