Header Ads

டிரம்ப் மகள் வருகை பிச்சைக்காரர்களுக்கு தடை?

ஐதராபாத்:அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மகள், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதிற்கு வருவதையொட்டி, நகரில் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த, சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். 

இங்கு, ஐதராபாதில், நவ., 28 - 30 வரை, தொழில் முனைவோர் மாநாடு நடக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபர், டிரம்பின் மகள், இவான்கா பங்கேற்று, உலகம் முழுவதிலும் இருந்து வரும், தொழில் முனைவோர்களுடன் உரையாடுகிறார். 

இந்த மாநாட்டில், பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இதையடுத்து, ஐதராபாத் நகரில், பிச்சைக்காரர்கள், குழந்தைகள் மற்றும் உடல் ஊன முற்றவர்களை வைத்து பிச்சையெடுக்க, போலீசார் தடை விதித்துள்ளனர்.இதற்கு முன், அமெரிக்க முன்னாள் அதிபர், பில் கிளிண்டன், ஐதராபாத் வந்த போதும், பிச்சைக்காரர்கள் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.