Header Ads

கோல்கொண்டா கோட்டையை பார்த்து வியந்த இவான்கா டிரம்ப்..

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க பெண் தொழில் முனைவோர் குழுவுக்கு தலைமை தாங்கி இந்தியா வந்துள்ளார்.

இன்று ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள கோல்கொண்டா கோட்டைக்கு இவான்கா சென்றார். அந்த கோட்டையின் பிரமாண்ட நுழைவுவாயிலில் நின்றபடி கைதட்டினால் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் அதன் எதிரொலி கேட்கும். அவ்வகையில், அந்த வாசலில் நின்று கைதட்டிய இவான்கா அந்த அதிசயத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

சுமார் 40 நிமிடங்கள் கோட்டையை சுற்றிப்பார்த்த அவரிடம் முகலாய மன்னர் ககாடியா, குதுப் ஷாஹி ஆகியோர் காலத்தில் கட்டப்பட்ட கோல்கொண்டா கோட்டையின் சிறப்பை பற்றி இந்திய அதிகாரிகள் விளக்கி கூறினர்.

இன்றிரவு தெலுங்கானா மாநில அரசின் சார்பில் இவான்கா உள்பட சுமார் 1500 பேருக்கு கோல்கொண்டா கோட்டையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.