Header Ads

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது: வடகொரியாவை எச்சரித்த தென்கொரியா..

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் ஒரு முறை மீறினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு, தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் வடகொரிய ராணுவ வீரர் ஒருவர், எச்சரிக்கையை மீறி தென் கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார். தப்பிச்செல்ல முயன்ற வீரரை வடகொரிய ராணுவ வீரர்களே சுட்டு வீழ்த்தினர். அவரை மீட்ட தென் கொரிய வீரர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்கு தென்கொரிய ராணுவ அமைச்சர் சாங் யங் மூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுக்குள் நுழைய முயன்ற ராணுவ வீரரை நோக்கி, வடகொரிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் என தெரிவித்துள்ள அவர், அங்கிருந்து வீரர்கள் எல்லை தாண்டி வருவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

நவம்பர் 13 ஆம் தேதி வடகொரிய, தென்கொரிய எல்லையில் வடகொரிய ராணுவ வீரர் தென்கொரிய எல்லைக்குள் தப்பிச் செல்ல முயன்றார். அதனால் வடகொரிய சக வீரர்களால் அவர் சுடப்பட்டார். காயம்பட்ட வீரரை தென்கொரிய வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ அமெரிக்க ராணுவத்தால் வெளியிடப்பட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.