Header Ads

வருமானவரி சோதனை நாளையும் தொடரும் என்று உயர் அதிகாரிகள் தகவல்!

சசிகலா உறவினர்களின் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என ஏறக்குறைய 190 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை  வருமான வரித்துறை சோதனை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள டி.டி.வி தினகரனின் முக்கிய ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூடுதல் ஆதாரம் இருப்பதாகக் கருதப்படும் இடங்களிலும், ஆவணங்கள் சிக்காத இடங்களிலும் சோதனையை நாளையும் தொடர்ந்து நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். முழு அளவில் சோதனை முடிந்த பிறகுதான், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களைப் பற்றிய தகவலை தெரிவிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.