Header Ads

ஒபாமாவின் மகள் மலியாவின் காதல் லீலை... ஆதரவாக ஒன்றிணைந்த ஜனாதிபதிகளின் மகள்கள்..



அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஒபா­மாவின் மகள் மலி­யாவும் அவ­ரது காத­லனும் கட்­டிப்­பி­டித்து முத்தம் கொடுக்கும் காட்­சிகள் நேற்­று­ முன்­தினம் இணை­யத்தில் பதி­வேற்­றப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் பலரும் தமது விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 
குறித்த வீடியோவில், விளை­யாட்டுப் போட்­டி­யொன்­றுக்கு முன்­ன­தாக மலியா ஒபாமா, ஒரு இளை­ஞனை இறுக்கி அணைத்து முத்­த­மிடும் காட்­சிகள் பதி­வா­கி­யி­ருந்­தன. ஒரு நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­தியின் மகள் இவ்­வாறு மைதா­னத்தில் நடந்­து­கொள்­வதா  எனப் பலர் விமர்­சித்­த­தை­ய­டுத்து அமெ­ரிக்­காவின் தற்­போ­தைய ஜனா­தி­பதியின் மகள் இவங்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில், “மாணவப் பரு­வத்தில் இருக்கும் மலியா தனது சுதந்­தி­ரத்தை அனு­ப­விக்கும் உரிமை உண்டு. அவர் ஒரு சுதந்­தி­ர­மான பெண். அவ­ரது சுதந்­திரம் பேணப்­பட வேண்டும்” என்று தெரி­வித்­துள்ளார்.
அதே­வேளை, “மலியா ஒபா­மாவை ஒரு இளம் பெண்­ணாக; ஒரு கல்­லூரி மாண­வி­யாக; ஒரு தனிப்­பட்ட நப­ராகக் கரு­த­வேண்­டுமே தவிர, விளை­யாட்டு பொம்­மை­யாகக் கரு­தக்­கூ­டாது” என்றும் தெரி­வித்­தி­ருக்­கிறார். அமெ­ரிக்­காவின் சட்­டப்­படி, அர­சியல் தலை­வர்­களின் பிள்­ளை­களின் சுதந்திரம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது. ஆனால், அந்த விதியை மீறும் வகை­யி­லேயே இந்தக் காட்சி பதி­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி பில் க்ளின்­டனின் மகள் செல்ஸி க்ளின்ட்­டனும் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள்.
ஏற்­க­னவே மலியா ஒபாமா சிகரட் புகைக்கும் வீடியோ ஒன்றும், அவர் வேடிக்­கை­யாகத் தனது பின்­ன­ழகைக் காட்டும் வீடியோ ஒன்றும் பதி­வேற்­றப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.