Header Ads

தமிழ் மாணவர்களுக்கு, சூட்சுமமாக ஆபாச வீடியோக்களை விநியோகித்த கும்பல்..!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து செயற்படும் சட்டவிரோத செயற்பாடுகள் எமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே செல்கிறது . அந்த வகையில் பாடசாலை அருகில் போதை பொருட்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாரின் குறித்த அதிரடி நடவடிக்கையில் முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து ஆபாச வீடியோக்களை கைத் தொலைப்பேசிகளில் பதிவேற்றி கொடுத்த கும்பல் சிக்கியுள்ளனர்.

பொலிஸாரிடம் சிக்கியுள்ள குறித்த கும்பல் கைத் தொலைப்பேசிகளை விற்பனை செய்யும் பேரில் ஆபாச வீடியோக்களை மாணவர்களுக்கு பதிவேற்றி கொடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2000த்திற்கும் அதிகமான தமிழ் சிங்கள மக்களின் ஆபாச மற்றும் இரகசிய வீடியோக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்த மடி கணினி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சட்ட விரோத கும்பல் மாணவர்களின் தொலைப் பேசிகளுக்கு ஆபாச வீடியோக்களை பதிவேற்றி  கொடுப்பதற்கு 100 ரூபாவையும் மாணவர்கள் அல்லாத ஏனையோரிடம் பென் ட்ரைவ்களில் வீடியோக்களை பதிவேற்றி கொடுப்பதற்கு 200 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரை பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கும்பல் மிக நீண்ட காலமாக குறித்த சட்ட விரோத செயற்பாட்டில் மிகவும் சாமர்த்தியமாக எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்த மடி கணினியை பகுதி பகுதியாக கழட்டி வைத்து வாடிக்கையாளர்கள் வீடியோக்களை பதிவேற்றி தருமாறு கேட்கும் பொழுது மாத்திரம் மடி கணினியை மீள் பொருத்தி வீடியோக்களை பதிவேற்றி கொடுத்து வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. இவை இந்தியாவின் RAW வின் வேலை தான். இவர்களே தமிழ் இனத்தை அழிக்க உளவியல் ரீதியாகவும் சமூக சீர்கேடுகளை புகுத்தியும் தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் - இது ஈழம் மட்டும் அல்ல - தமிழ் நாட்டிலும் நடக்கிறது.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.