Header Ads

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு தடை விதிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை!

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட உள்ளது.

இந்தியாவின் பதான்கோட் ராணுவ தளத்தின் மீது கடந்த ஆண்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம்தான் அந்தத் தாக்குதலை நடத்தியது. அதன் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரி, ஐ.நா.வில் இந்தியா விண்ணப்பித்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்தன.

ஆனால், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா ஒப்புதல் அளிக்கவில்லை. ‘சில தொழில்நுட்ப காரணங்கள், போதிய ஆதாரங்கள் இல்லாததால், இதுகுறித்து முடிவெடுக்க அவகாசம் வேண்டும்’ என்று சீனா கோரியது. இதற்கிடையில் இந்தியா அளித்த விண்ணப்பம் கடந்த ஆண்டு டிசம்பரில் காலாவதியானது.

இதையடுத்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் புதிய தீர்மானத்தை கடந்த ஜனவரி மாதம் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்தது. அதற்கு பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு அளித்தன. இந்த புதிய தீர்மானத்துக்கு சீனா பதில் அளிக்க கூடுதலாக 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டது.

இந்நிலையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வரும் வியாழக்கிழமை காலாவதியாகிவிடும். அதற்குள் சீனா பதில் அளிக்க வேண்டும்.

இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூவா சுங்யிங் நேற்று கூறும்போது, ‘‘அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான கமிட்டியில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. சம்பந்தப்பட்ட நாடு கொடுத்துள்ள விண்ணப்பத்தில் ஆட்சேபனைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க சீனாவுக்கு மேலும் அவகாசம் வேண்டும்’’ என்று தெரிவித்தார்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.