Header Ads

மாவீரர் தினத்திற்கு தயார் நிலையில், மன்னார் துயிலுமில்லங்கள்..

எதிர்வரும் 27 ம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர்தின நிகழ்விற்காக தாயகத்தில் விடுவிக்கப்பட்ட அனைத்து துயிலுமில்லங்களைப்போல் மன்னார், மடு பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லமும், மாந்தையில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி துயிலுமில்லமும் துப்பரவுப்கணிகளை நிறைவுசெய்து அஞ்சலி நிகழ்விற்கு தயாராகி வருகின்றது.
முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , பொதுமக்கள் ஆகியோரது பங்களிப்புடன் இம்முறை உணர்வெழிற்சியுடன் மாவீரர்களை அஞ்சலிப்பதுடன் மாவீரர் பெற்றோரையும்,உரித்துடையவர்களையும் கௌரவிக்க திட்டமிட்டுள்ளமையினால் துயிலுமில்லத்தை அன்மித்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்களின் பூரண ஆதரவை ஏற்பாட்டுக்குழு கோரி நிற்கின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.