Header Ads

வடகொரியா முழு அமெரிக்காவையும் தாக்கும் புதிய ஏவுகணை பரிசோதனை, ரஷியா சொல்வது என்ன..?

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு நிலைகளில் தொடர் பொருளாதார தடைகளை எதிர்க்கொண்டு வரும் வடகொரியா இவற்றை  பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. நேற்று வடகொரியா புதிதாக கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை மிக்க ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்துள்ளது. இது 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது. இது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் தாக்குகிற வல்லமை படைத்தது என தகவல்கள் கூறுகின்றன.

வடகொரியாவின் இத்த அத்துமீறிய செயல்பாட்டிற்கு அமெரிக்கா, ஜப்பான் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.

 சீனாவிற்கு அடுத்து வடகொரியாவின் நட்பு நாடாக பார்க்கப்படும் ரஷியா, ‘வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஆத்திரம் ஏற்படுத்தும் செயல், இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என கூறிஉள்ளது.

“வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஆத்திரம் ஏற்படுத்தும் செயல், இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். கொரிய தீபகற்பகத்தில் மோசமான சூழ்நிலையை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்,” என கூறிஉள்ளது ரஷியா.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.