Header Ads

யாழ், வாள்வெட்டுச் சம்பவங்கள்: பதினொருபேர் சந்தேகத்தின்பேரில் கைது.!


யாழ்ப்பாணம் வாள்வெட்டு: பதினொருபேர் சந்தேகத்தின்பேரில் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மைய சில நாட்களாக இடம்பெற்றுவந்த வாள் வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் மேலும் பதினொருபேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் சோதனை நடவடிக்கைகளில் மேற்படி பதினொரு சந்தேக நபர்கள் நேற்றிரவு யாழ்நகரில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முற்றபடுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாள் வெட்டுக்கள் இடம்பெற்ற இடங்களை வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ இன்று நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளையும் அவர் பார்வையிட்டார். அத்துடன் வாள்வெட்டுக்களில் காயமடைந்தவர்களையும் வைத்தியசாலையில் சென்று அவர் பார்வையிட்டதுட்டார்.
பொறுப்பற்ற சில சிறிய இளைஞர் குழுக்களாலேயே இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதைப் பாரிய பயங்கரவாத செயலுடன் ஒப்பிட்டு அச்சமடையத்தேவையில்லை எனவும் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தாம் இனம் காண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தொடர் நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தெரிவித்த அவர், இந்த சம்பவத்திற்கு விரைவில் முற்றுப்புள்ள வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்றைய தினமும் யாழ்நகரில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.