Header Ads

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 'முதிர்ச்சியற்றவர்' 'சிந்திக்காதவர்'.. ஈரான் விமர்சனம்..

ஈரான் நாட்டின் பெருந்தலைவராக கடந்த 1989-ம் ஆண்டு முதல் இருந்து வரும் அயோத்துல்லா காமேனி. வளைகுடா நாடுகளில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். அணு ஆயுத சோதனை உள்பட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எதிர்ப்பை சட்டை செய்யாமல், மத்திய கிழக்கு நாடுகளில் தனி செல்வாக்குடன் செயல்பட்டு வருகிறார்.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சமீபத்தில் பொறுப்பேற்ற முகம்மது பின் சல்மான், தொடர்ச்சியான சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரது பல நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டுகளை அள்ளிவீசி வருகின்றது.

ஹிஸ்புல்லா இயக்கத்தின் பின்னணியில் ஈரான் இருந்து கொண்டு தனது உயிருக்கு குறி வைப்பதாக லெபனான் பிரதமர் சாத் ஹரிரி சமீபத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறிய ஹரிரி, சவூதியில் தஞ்சமடைந்து பின்னர் இரு வாரங்களுக்கு பின்னர் சொந்த நாடு திரும்பினார்.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஈரான் முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஈரான் பெருந்தலைவரை புதிய ஹிட்லர் எனவும் அவர் விமர்சித்தார்.

முகமது பின் சல்மானின்  கருத்துக்கு ஈரான்  கடுமையான பதிலடி கொடுத்துள்ளது

முகமது  பின் சல்மான்,''முதிர்ச்சியற்ற, சிந்திக்காத, அடிப்படையற்ற கருத்துக்கள்'' கொண்டவராக இருப்பதாக ஈரான் வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பஹ்ராம் கஸீமி குற்றஞ்சாட்டி உள்ளதாக இஸ்னா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

''பிராந்தியத்தின் பிரபல சர்வாதிகாரிகளின் நடத்தையையும், கொள்கைகளையும் முன்மாதிரியாகக் கொண்டுள்ள சல்மான், அந்த சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்'' என பஹ்ராம் கஸீமி கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.