Header Ads

உத்தரகாண்ட் மாநிலத்தில், 4.7 ரிக்டரில் நிலநடுக்கம்..

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நேற்று  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நேற்று  மாலை 4:47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

கடந்த 11-ம் தேதி இதே பகுதியில் 5.5 ரிக்டராக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.