Header Ads

ஜெயலலிதாவின் நிறைவேறாத மூன்று ஆசைகள்.. என்னென்ன என்று தெரியுமா..?

கோமளவல்லி... இது தான் 'அம்மா' என்று தமிழகத்தில் அனைவராலும் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் இயற்பெயர்.

எப்படி ஒரு தனி மனுஷி... இந்த கட்சியை தனியாளாக வழிநடத்தி சென்றார்? ஆணாதிக்கம் கொண்டுள்ள தமிழக அரசியலில் தனி ஒருத்தியாக எப்படி இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்? என முன்பை விட இப்போது தான் மக்கள் மத்தியில் மிகுந்த வியப்பு ஏற்படுகிறது. விளங்காத அறிக்கைகைகள், பிறழும் செயற்பாடுகள் என அவ்வளவு அக்கப்போர்கள்.

ஜெயலலிதா மிகுந்த செல்வாக்கும், செல்வமும், அதிகாரமும் கொண்டிருந்தார் என்பது மட்டுமே நமக்கு தெரிந்த விஷயங்கள். உலகறிந்த ஒரு அரசியல்வாதி, இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த நபர்.

அவர் நினைத்தால் எதை வேண்டாலும் அடையலாம் என்ற எண்ணம் தான் நம்மிடையே இருக்கிறது. ஆனால், தனது வாழ்வில் அவர் விரும்பிய மூன்றே மூன்று ஆசைகள் கூட அவரால் அடைய முடியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

பணக்காரன், ஏழை, நடுத்தர வாழ்க்கை நடத்துபவன் என உலகில் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அனைவரிடமும் இருக்கும் முதல் ஆசை.... தாங்கள் விரும்பியதை படித்து, அந்த வேலை / தொழிலில் சிறந்த விளங்க வேண்டும் என்பது தான். இந்த ஆசை ஜெயலலிதா அவர்களுக்கும் இருந்தது. ஆனால், கிடைத்ததா என்பது தான் பெரிய கேள்விக்குறி.

பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருந்தார் செயலலிதா. பத்தாம் வகுப்பு மாநில அளவிலான மெட்ரிகுலேஷன் தெரிவில் முதல் இடம் பிடித்தமைக்காக அரசிடம் இருந்து கோல்ட் ஸ்டேட் விருது பெற்றிருக்கிறார் ஜெயலலிதா. இவருக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருந்து படிக்க சலுகை கிடைத்தது என்றும், அதை இவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் அப்பா ஒரு வழக்கறிஞர். இவரை போலவே தானும் படித்து ஒரு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற கனவுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால், குடும்ப பொருளாதார சூழலின் காரணமாக அம்மாவின் வலுக்கட்டாயத்தின் பேரில் நடிப்பு துறையில் நுழைந்தார் ஜெயலலிதா. இப்படி தான் ஜெயலலிதாவின் முதல் கனவானப் படிப்பும், வேலையும் தகர்ந்து போனது.

இவரது தந்தை ஜெயராம் ஒரு வழக்கறிஞர். ஆனால், அவர் அந்த துறையில் சிறப்பாக வேலை செய்யவில்லை. சொத்துக்களை செலவு மட்டுமே செய்து வந்தார். ஜெயலலிதாவிற்கு இரண்டு வயது இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார். இதன் பிறகே 1950-ல் ஜெயலலிதா பெங்களூரில் இருந்த தாத்தா வீட்டிற்கு பெயர்ந்துள்ளார். இவரது அம்மா வேதவல்லி (இயற்பெயர்) என்கிற சந்தியா (சினிமா பெயர்) ஆரம்பக் காலத்தில் கிளர்க் வேலைக்காக டைப்ரைட்டிங் பயின்றுள்ளார்.

பிறகு 1953 சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடிக்க துவங்கினார். இப்படி தான் ஜெயலலிதாவின் வாழ்வில் சினிமா அறிமுகமானது. 1950 - 1958 வரை தனது தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் பள்ளி படித்து வந்தார் ஜெயலலிதா. அப்போது கோடை விடுமுறை நாட்களில் மட்டுமே தனது அம்மாவை காணும் வாய்ப்பு பெற்றிருந்தார் என கூறப்படுகிறது.

1958ல் தனது அத்தையின் திருமணத்திற்கு பிறகே ஜெயலலிதா மெட்ராஸ் இடம் பெயர்ந்து தனது அம்மாவுடன் ஒன்றாக வாழ துவங்கினார். சிறு வயதிலேயே பல்வேறு இடங்களில் வாழ்ந்த காரணத்தால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேச கற்றிருந்தார் ஜெயலலிதா.

மெட்ராஸில் இருந்த போது ஜெயலலிதா கர்நாடிக சங்கீதம், வெஸ்டர்ன் கிளாஸிக்கள் பியானோ மற்றும் பரதம், குச்சிப்புடி, மோகினியாட்டம், மணிபுரி, கத்தக் போன்ற பல்வேறு நடன கலைகளும் கற்றிருந்தார். பரதம் கே.ஜே. சரசாவிடமும், குச்சிப்புடி பத்மபூஷன் டாக்டர் வேம்பதி சின்ன சத்தியம் அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார்.

1960 மே மாதத்தில் மைலாப்பூரில் இருந்த ரசிக ரஞ்சனி சபாவில் தனது முதல் அரங்கேற்றத்தை நடத்தினார் ஜெயலலிதா. அந்த அரங்கேற்றத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவின் நடன திறமையை கண்டு வியந்த நடிகர் திலகம். எதிர்காலத்தில் ஜெயலலிதா சிறந்த நடிகையாக வருவார் என பாராட்டி சென்றுள்ளார்.

நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை அம்மாவின் ஆசையால் நடிப்பு துறைக்கு திசை மாறியது. தனது முதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலக சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் நடித்த ஸ்ரீ சைல மகாத்மே என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது இவரது வயது 13.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.