Header Ads

ஒரு பெரிய நடிகர் வருவதால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், ரஜினியை பிறகு வரச்சொன்ன சாமியார்..

சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தன் ரசிகர்களை 4 வது நாளாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்தார்.

நேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

என் நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எனது குரு சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி எனது குரு. சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியே பாபா படம் எடுத்தேன். அதேபோல் தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு ஞாபகம் வரும்.

ஆன்மிகத்திற்கும் ஓரளவுக்கு பப்ளிசிட்டி தேவை. கோவை விமான நிலையத்தில், அண்ணாமலை படம் ரிலீசான சமயத்தில் நடிகர் சிவாஜியுடன் வந்திருந்தேன்.

நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிந்திருந்தனர். நாங்கள் வெளியே வந்ததும், ரஜினி வாழ்க என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். மாபெரும் நடிகரான சிவாஜி முன்னால் ரசிகர்கள் என் பெயரைச் சொல்லி கோஷமிட்டது, எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. உடம்பில் பாம்பெல்லாம் ஊறுவதுபோன்ற சூழலை ஏற்படுத்தியது. அதைக் கண்டுகொண்ட சிவாஜி, ''இது உன் காலம்டா. நல்ல படங்கள் நிறையக் கொடு'' என்று வாழ்த்தினார். சினிமா என்றாலும், அரசியல் என்றாலும் காலம் மிகவும் முக்கியமானது. காலம் வந்தால் எல்லாம் தானாகவே மாறும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்று நாம் வாழ வேண்டும். குடும்பத்தை முதலில் கவனியுங்கள். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே சமுதாயம் நம்மை மதிக்கும்'

வாழ்க்கையில் மரியாதை தான் முக்கியம். நல்ல குணாதிசியம் இருந்தால் தான் மரியாதை கொடுப்பார்கள். அதில் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தான் எல்லாருடைய மனதிலும் வாழ்கிறார் என்றார், அவருடைய குணாதிசயம் தான் அதற்கு காரணம். அந்த மதிப்பு தான் முக்கியம்.   அவரது நல்ல குணத்தாலேயே அவரது புகழ் இன்றும்  நிலைத்து நிற்கிறது

சமீபத்தில் கோவையில் ஒரு சாமியாரின் ஆசிரமத்திற்க சென்றிருந்தேன். அப்போது வேறு ஒரு பெரிய நடிகர் வருவதால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறி என்னை தாமதமாக வரச் சொன்னார்கள். இது அவருடைய காலம். சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் காலம் மிக முக்கியம்.

எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து தான் மக்கள் நம்மை மதிக்கிறார்கள். தக்க சமயம் வருபோது சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும். குடும்பம், தாய், தந்தை மிக முக்கியம் என்றார்.

முன்னதாக ரசிகர்களை சந்திக்க போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினியிடம், திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என அவரிடம் கேள்வி கேட்கபட்டது இதற்கு பதிலளிக்க ரஜினி மறுத்து விட்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.