Header Ads

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது.. தகவல்கள்.

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு நிலைகளில் தொடர் பொருளாதார தடைகளை எதிர்க்கொண்டு வரும் வடகொரியா இவற்றை  பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. உலக அரங்கில் எதிர்ப்பை சந்திக்கும் வடகொரியாவிற்கு நட்பு நாடாக சீனா இருக்கிறது. சீனா, வடகொரியாவிற்கு பாகிஸ்தான் வழியாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வழங்குவதாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியா அணு ஆயுதத்தை விரிவுப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு எச்சரிக்கையானது என இந்தியா கருதுகிறது.

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் வடகொரியாவிற்கு அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கான தொழில்நுட்பம் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பது எப்படி என்பது தொடர்பாக விரிவான விசாரணைக்கு இந்தியா வலியுறுத்தும் என இந்திய வெளியுறவு கொள்கையில் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்து உள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது. வடகொரியாவிற்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் மற்றும் சீனா வழங்குகிறது என்பதே குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

 இந்நிலையில் வடகொரியா - சீனா - பாகிஸ்தான் இடையிலான தொடர்பு குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்க இந்தியா விரும்புகிறது. வடகொரியா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒரு குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது, ஆலோசிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.