Header Ads

கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ரெலோ.! தனித்து விடப்பட்ட தமிழரசுக்கட்சி.. மீண்டும் உதயசூரியன் சின்னத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..?

தொகுதிப்பங்கீடு தொடர்பில் கூட்டமைப்புக்குள் ஏற்ப்பட்டுள்ள பிணக்கு காரணமாக ரெலோ தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என இன்று அதிகாலை அறிவித்துள்ள நிலையிலும். ஏற்கனவே அதிர்ப்தியில் கூட்டமைப்பின் கூட்டத்திலிருந்து வெளியேறிய புளட் அமைப்பும் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கான வாப்புக்கள் அதிகமாக உள்ளமையினால் மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக உதயசூரியன் மாற்றப்பட உள்ளது.

தமித் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி , ஈ.பி.ஆர்.எல்.எப். , ரெலோ , தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெளியேறி உள்ளமையினால்  தமிழரசுக்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை பாவிக்கும் தகுதியை இழந்துள்ளது, வெளியேறிய கட்சிகளில் தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒரே அணியில் இணையும் வாய்ப்புள்ளமையினால் அமைய இருக்கிற புதிய கூட்டமைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரை பாவிக்க வாய்ப்புள்ளது .

எனவே இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதய சூரியன் சின்னத்திலும் , தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்திலும் , தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய முன்னணி ) ஈருருளி சின்னத்திலும் தேர்தலை எதிர்கொள்ளலாம் .

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.