Header Ads

வட கொரி­யா­வு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை, அனைத்து உலக நாடு­களும் துண்­டிக்க வேண்டும்...

வட கொரியா புதி­தாக ஏவு­க­ணையை ஏவிப் பரி­சோ­தித்­த­தை­ய­டுத்து அந்­நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை அனைத்து நாடு­களும் துண்­டிக்க வேண்டும் என அமெ­ரிக்கா அழைப்பு விடுத்­துள்­ளது. 
அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கொரி­யா­வுக்­கான எண்ணெய் விநி­யோ­கங்­களை நிறுத்த சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்­கிடம் கேட்டுக்கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி  கூறினார்.
வட கொரி­யாவின் ஏவு­கணைப் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபையில் கூட்­டப்­பட்ட அவ­சரக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இவ்­வாறு கூறினார்.
 அமெ­ரிக்கா மோதல் ஒன்றை நாட­வில்லை எனவும் ஆனால் போர் ஒன்று இடம்­பெறும் பட்­சத்தில் வட கொரியா முற்று முழு­தாக அழிக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்தார்.
 வட கொரியா கடந்த இரு மாத காலப் பகு­தி­யி­லான தனது முத­லா­வது ஏவு­கணைப் பரி­சோ­த­னையை நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மேற்­கொண்­ட­தை­ய­டுத்தே இந்த எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
 அந்த ஏவு­க­ணை­யா­னது 4,475  கிலோ­மீற்றர் உய­ரத்­துக்குச் சென்று சுமார் 13,000 கிலோ­மீற்றர் தூரத்­திற்கு பய­ணிக்கக் கூடி­யது என வட கொரியா உரி­மை­ கோ­ரி­யுள்­ளது. இது  சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து  பூமியின் வளி­மண்­ட­லத்­துக்குள் போரா­யு­த­மொன்றை பிர­யோ­கித்து  தாக்­கு­தலை நடத்­து­வ­துடன் ஒப்­பி­டு­கையில் 10  மடங்கு அதிக உயரம் என அந்­நாடு கூறு­கி­றது.
இதன் பிர­காரம் மேற்­படி ஏவு­க­ணை­யா­னது பிரித்­தா­னிய லண்டன் நகர்,  அமெ­ரிக்க நியூயோர்க் நகர் உள்­ள­டங்­க­லாக உலகின் அநேக நகர்­களை சென்று தாக்கும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  அந்த வகையில் இந்த ஏவு­க­ணையின் தாக்­கு­த­லி­லி­ருந்து தென் அமெ­ரிக்­காவும் ஆபி­ரிக்­காவின் சிறு பகு­தியும் மட்­டுமே விடு­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.  
ஆனால்  வட கொரியா அத்­த­கைய உச்ச நிலைத் தொழில்­நுட்ப ஆற்­றலைப் பெற்­றி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை என்றே நிபு­ணர்கள் கரு­து­கின்­றனர்.
எனினும் இந்த ஏவு­கணைப் பரி­சோ­த­னை­யா­னது எது­வி­தத்­திலும் குறை­கூற முடி­யாத சாத­னை­யொன்­றா­க­வுள்­ள­தாக வட கொரிய தலைவர் கிம் யொங் – உன் குறிப்­பிட்­டுள்ளார்.
 வட கொரியா இந்த வரு­டத்தில் இதை­யொத்த அநேக ஏவு­கணைப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டுள்ள போதும்,  தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பரி­சோ­த­னை­யா­னது முழு அமெ­ரிக்­கா­வையும் இலக்­கு­வைக்­கக்­கூ­டிய ஆற்­றலைக் கொண்­டுள்­ளது என வட கொரிய அர­சாங்கம் தெரி­விக்­கி­றது.
இத்­த­கைய அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் தொடரும் பட்­சத்தில் அது வட கொரி­யாவின் ஸ்திரத்­தன்மையை மேலும் சீர்­கு­லைக்­க மட்­டுமே வழி­வகை செய்யும் என நிக்கி ஹேலி எச்­ச­ரித்­துள்ளார்.
 வட கொரியா தனது ஏவு­கணை மற்றும் அணு­சக்திப் பரி­சோ­த­னை­களை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ள ரஷ்யா,  அமெ­ரிக்கா இந்த மாதம் தென் கொரி­யா­வுடன் இணைந்து நடத்தத் திட்­ட­மிட்­டுள்ள இரா­ணுவப் பயிற்­சி­களை நிறுத்த வேண்டும் எனவும் அந்தப் பயிற்­சிகள் நிலை­மையை மேலும் பார­தூ­ர­மாக்கும் வகையில் அமைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
அமெ­ரிக்கா தனது இரா­ணுவ பயிற்­சி­களை நிறுத்­து­வ­தற்கு பதி­லாக வட கொரியா தனது ஆயுதப் பரி­சோ­த­னை­களை நிறுத்தக்கூடும் என சீனா யோச­னையை முன்­வைத்­துள்­ளது. இதை­யொத்த யோசனை கடந்த காலத்தில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்ட போது வட கொரியா அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தது.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரி­யாவால் மேற்­கொள்­ளப்­பட்ட அணு­சக்திப் பரி­சோ­தனை குறித்து  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  குறிப்­பி­டு­கையில், அந்­நாட்டுத் தலைவர் கிம் யொங் – உன்னை ' நோயுற்ற நாய்க்­குட்டி'  என விமர்­சித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.