Header Ads

திருமணமாகாத மகள்களை சந்தைக்கு அழைத்து வந்து, ஏலத்தில் விடும் பெற்றோர்!!!

பல்கேரிய நாட்டின் ஸ்டாரா ஜோகர் பகுதியில்  மணப்பெண்களை சந்தைக்கு அழைத்து வந்து ஏலத்தில் விடும் விநோத பழக்கம் நடைபெற்று வருகிறது.

அந்த நாட்டின் குறிப்பிட்ட சில இனத்தினரால் இந்த சந்தை நடத்தப்படுகிறது. இந்த சந்தையில் தங்கள் மகள்களை திருமணம் செய்துவைக்க முடியாத பெற்றோர் இந்த சந்தைக்கு அழைத்து வருவார்கள்.

திருமணத்திற்காக பெண் தேடும் ஆண் இந்த சந்தைக்கு வந்து வரிசையில் காத்திருக்கும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்.

இருவருக்கும்  பிடித்திருந்தால் அந்த பெண்ணுடன் பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் வாய்ப்பு அளிக்கப்படும்.

பின்னர் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் ஒரு விலையைப் பேசி திருமணம் செய்துகொள்ளலாம். ஒருவேளை ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பினால் ஏலம் விடப்படும். இந்த சந்தையில் இளம் பெண்களுக்குதான் அதிக மவுசு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சந்தையில் விற்கப்படும் பெண்களின் எதிர்காலம், நம்பகத்தன்மை குறித்த பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பிட்ட சில இனங்கள் சார்ந்த நம்பிக்கையாக இது பார்க்கப்பட்டாலும் முகம் சுளிக்கச் செய்கிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.