Header Ads

தொகுப்பாளினி டிடி இனி சின்னத்திரையில் இல்லை..?


தொகுப்பாளினி டிடி இனி சின்னத்திரையில் இல்லை வெள்ளித்திரையில் மட்டும் தான்..!

தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவர் தான் மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்கியவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. 
அவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர். மேலும், இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார். அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகு பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர்.
ஆனால் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார் இவர். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் சர்வம் தால மயம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.