Header Ads

இதற்கான சகல ஏற்பாடுகளையும் இவர்கள் ஓசை படாமல் செய்து வந்தார்கள். சாதாரன கார் ஒன்றை...X-ray Reportபிரித்தானியாவில் உள்ள செஸ்டர் பீஃல்ட் என்னும் நகரில், மீன்  உணவுகளை பொரித்து விற்க்கும் கடை ஒன்று உள்ளது. "மா-மேட் பிஷ் & சிப்ஸ்" என்பது இக் கடையின் பெயர் ஆகும். இதனை இயக்கி வந்த அன்டி ஸ்டார்(31) மற்றும் பாஃரா(22) ஆகிய நபர்கள் இருவரும் பெரும் திட்டம் ஒன்றை தீட்டி இருந்தார்கள். அதாவது கிருஸ்மஸ் தினமான 25ம் திகதி அன்று. லண்டனின் முக்கிய மையப் பகுதி ஒன்றில், ரிமோட் கன்றோலில் இயங்கும் ஒரு காரை லேப் டொப் உதவியோடு இயக்குவது. அது சன நெரிசல் அதிகம் உள்ள இடத்திற்கு சென்ற உடனே அதில் உள்ள சக்தி வாய்ந்த குண்டை வெடிக்கச் செய்வது. இதனூடாக எவருமே சிக்காமல் தப்பிக் கொள்வதே இவர்களின் பெரிய திட்டம்.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் இவர்கள் ஓசை படாமல் செய்து வந்தார்கள். சாதாரன கார் ஒன்றை, ஆள் இல்லாமல் ஓட்டக் கூடிய முறையில் மாற்றியமைத்தார்கள். வீட்டிலேயே குண்டு ஒன்றையும் தயாரித்தார்கள். இதனை காரில் பொருத்த எத்தனித்து. அதற்கான பரிசோதனைகளை நடத்தி வந்தார்கள். இன் நிலையில் தான் இதனைஸ் ஸ்காட்லன் யாட் பொலிசார் மோப்பம் பிடித்துள்ளார்கள். தான் ஆள் இல்லாமல் ஓடும் காரை செய்து விட்டதாக Facebook  ஊடாக தனது நண்பருக்கு message அனுப்பியுள்ளார் ஆன்டி ஸ்டார். இந்த மெசேஜ் சந்தேகத்திற்கு இடமானது என்று முதலில் சைபர் கிரைம் பொலிசார் 14ம் திகதி கண்டறிய. அவர்கள் இன் நபர்கள் யார் என பாக்கிறவுன் செக்(background check) செய்துள்ளார்கள். இவர்கள் இருவருமே ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும். பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரியவர்கள் என்றும் பொலிசார் கண்டு பிடிக்கவே.அன்று முதல் சுமார் 5 நாட்கள் அவர்களுக்கே தெரியாமல், பொலிசார் அவர்களை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது பிஷ் அன் சிப்ஸ் கடை , அதற்கு மேலே உள்ள வீடு என்று அனைத்தும் பொலிசாரின் கண்காணிப்புக்குள் வந்தது. 19ம் திகதி அதிகாலை, திடீரென முற்றுகையிட்டு. கடை மற்றும் வீட்டை உடைத்து உள்ளே சென்ற பொலிசார் அவ்விருவரையும் கைதுசெய்ததோடு. அவர்கள் தயாரித்த குண்டு மற்றும் ஆளில்லாமல் ஓடக் கூடிய கார், அதனை இயக்க வல்ல லேப்-டொப் என அனைத்தையும் கைப்பற்றி. பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்கள். முதலில் ரகசிய நீதிமன்றம் ஒன்றில் அவர்களை ஆஜர் செய்து , தடுத்து வைத்த பொலிசார் பின்னர் கிருஸ்மஸ் தினம் முடிந்த பின்னரே இந்த தகவலை முற்று முழுதாக வெளியிட்டுள்ளார்கள்.இவ்வாறு தாம் சுமார் 50 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை 2017ம் ஆண்டில் மட்டும் தடுத்துள்ளதாக பெருமையுடம் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானிய பொலிசாருக்கு பெரும் சலீயூட் கொடுக்க வேண்டிய தருணம் இவை. கடையை உடைக்கும் வேளையில், இந்த தீவிரவாதிகள் குண்டை வெடிக்க வைக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. அப்படி என்றால் நாம் அனைவரும் இறந்திருப்போம். இருப்பினும் கடைக்குள் செல்லவேண்டும் என்பதில்,  எந்த ஒரு அச்சமும் எமக்கு இருக்க வில்லை என்று துணிச்சலோடு பிரித்தானிய பொலிசார் கூறும் தருணம் , அவர்களின் மனித நேயப் பணிகளை பாராட்டாமல் எவராலும் இருக்க முடியாது எனலாம். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.