Header Ads

15 வயது சிங்களப் பெண்ணை கர்நாடகாக் காரன் கற்பழித்தான் - அம்மாவை ஹோட்டல் ரூமில் அடைத்து



மல்லிக(பெயர் மாற்றப்பட்டுள்ளது)  என்னும் 16 வயதுப் பெண்ணை பேஸ் புக் ஊடாக இந்தியாவில் இருந்து சதீஸ் என்னும் நபர் தொடர்புகொண்டுள்ளார். இலங்கையில் இருந்த குறித்த பெண்ணை, பாலிவுட்டில் நடிக்க வைக்க தன்னால் முடியும் என்றும். குறித்த பெண் பார்பதற்கு மாடல் அழகி போல உள்ளார் என்றும் சதீஸ் என்னும் கன்னடர் தெரிவித்துள்ளார். தான் இந்தியா பெங்களூரில் இருப்பதாக தெரிவித்த சதீஷ், இலங்கை காசு 2 லட்சம் தந்தால் மட்டுமே, உங்கள் பெண்ணை உயர்ந்த நிலைக்கு கொண்டு போக முடியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி அம்மாவும் இலங்கை காசு 2 லட்சத்தை தயார் செய்து, மகளை அழைத்துக்கொண்டு இந்தியா சென்றுள்ளார். பெங்களூரில் ஒரு ஹோட்டலுக்கு அவர்களை வரவளைத்த சதீஷ். அவர்களை வரவேற்று குளிர் பாணம் கொடுத்துள்ளார். அதனைக் குடித்த மறு நிமிடமே அம்மா பிள்ளை இருவரும் மயங்கிப் போனார்கள். அப்பெண்ணை கற்பழித்த சதீஷ். அம்மாவை அதே ஹோட்டலில் அடைத்து வைத்துக்கொண்டு. சிறுமியை விலைபேசி விற்க்க முயன்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரையும் அச்சுறுத்தி பஸ்சில் அழைத்துச் செல்ல முற்பட்டவேளை.

அவர்கள் அதில் இருந்து தப்பி அருகே உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில், நடந்ததைக் கூறியுள்ளார்கள். ஆனால் பொலிசார் இதில் மட்டும் கில்லாடிகள், அவரைப் பற்றிய அடையாளங்களை சொன்ன ஒரு சில மணி நேரத்தில் சதீஷை லோக்கல் ஏரியாவில் கைதுசெய்து. இவரா பாருங்கள் என்று காட்டியுள்ளார்கள். சர்வதேச நிறுவனம் ஒன்றின் உதவியோடு அச்சிறுமிக்கு முதலில் மன உழவியல் சிகிச்சை கொடுத்து , பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் கர்நாடக பொலிசார். அம்மாவின் பேரசை , சிறுமியின் வாழ்வை சீரழித்துள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.