Header Ads

லண்டனில் இதயத்தை பின் பக்கமாக சுமந்து வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரே பெண் இவர் தான்...



எல்லாருக்கும் இதயம் என்பது நெஞ்சின் உள்ளே இருக்கும். சில பிள்ளைகள் பிறக்கும் போதே இதயம் வெளியே காணப்படும். பின்னர் அறுவை சிகிச்சை செய்து அதனை உள்ளே வைப்பார்கள் மருத்துவர்கள். அதில் பெரும்பாண்மையான பிள்ளைகள் இறந்துவிடுவது வழக்கம். ஆனால் இதயமே இல்லாமல், செயற்க்கை இதயத்தோடு வாழும் அதிசய பெண் ஒருவர் பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் பெரும் இதய சத்திர சிகிச்சைக்கு உள்ளான, செல்வா ஹுசைன் என்னும் 39 வயதான இப்பெணின் இருதயம் இயங்காமல் போனது. இதனை அடுத்து பிளாஸ்டிக்கினால் ஆன செயற்கை இருதயம் ஒன்றை மருத்துவர்கள் பொருத்தினார்கள். இவரது இந்த செயற்கையான இருதயத்தின் முக்கிய பாகங்கள், அவரது முதுகில் உள்ள பையில் தான் உள்ளது. அதில் ஒரு மோட்டர், பற்றரிகள் உள்ளது. இவை ரத்தத்தை செயற்கை இருதயத்திற்கு தள்ள, அது அதனை சீராக ஏனைய பாகங்களுக்கு கடத்துகிறது.

சுமார் 89,000 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியான இந்த, இருதயத்தோடு அவர் உயிர்வாழ்ந்து வருகிறார். இவரது இயத்திரத்தில் கோளாறு ஏதாவது ஏற்பட்டால். 90 செக்கனில் அடுத்த இயத்திரத்திற்கு அதனை மாற்றவேண்டும். இல்லை என்றால் உயிர் பிரிந்துவிடும் என்ற நிலையில் அவர் வாழ்ந்து வருவதாகவும். அவர் புத்தாண்டை காண ஆவலாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.





No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.