Header Ads

வரதட்சணை கொடுமையால் பிரிந்து சென்ற மனைவிக்கு, தபாலில் ‘முத்தலாக்’..

தானேயில் உள்ள சாந்திநகர் போலீஸ் நிலையத்தில் 20 வயது பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார்.

இதில் அவர் கூறியிருந்ததாவது:–

எனக்கு கடந்த 2016–ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே என் கணவர் மற்றும் குடும்பத்தினர் என்னை வரதட்சணை வாங்கி வாங்கிவரும்படி கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர். அவர்களில் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் நான் என் கணவர் வீட்டில் இருந்து வெளியேறினேன். தற்போது என் தாய் வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் என் கணவர் 100 ரூபாய் முத்திரைதாளில் எனக்கு முத்தலாக் கூறி விவகாரத்து வழங்குவதாக தபால் அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னை துன்புறுத்தி, முத்தலாக் வழங்கியிருக்கும் எனது கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறிருந்தது.

இந்த புகாரின் போலீசார் போலீசார் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.