Header Ads

வைர மலை கண்டுபிடிப்பு!!! எங்குள்ளது தெரியுமா..?

கர்னூல் மாவட்டம் சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக தகவல் வெளியானதைத்தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுரங்கத்துறை சார்பில் ஸ்கேனர் மூலம் சென்னூர் கோட்டையைச் சுற்றி சோதனை செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது.

கோட்டைக்கு செல்லும் வழியில் 12 மீட்டர் உயரத்துக்கு வைரத்துக்கான மூலக்கூறு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று வைரம் பிரித்து எடுப்பது பற்றி சுரங்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

குத்திராஜா, விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்ததாகவும், போர்த்துக்கேயர்கள் போர் தொடுத்து வந்தபோது மன்னர்கள் இந்த கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரியங்கள் அடங்கிய புதையலை பதுக்கி வைத்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அப்பகுதியில் வாழும் மக்களும் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால் ஓரிரு நாளில் புதையலை கண்டறிவதற்கான வாய்ப்பிருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அகழ்வாராய்ச்சியின் போது புதையல் இருப்பதன் குறிப்பு போல 11 படிகளும், தேவதை சிலைகளும், மூன்றுதலை பாம்பின் சிலையும் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநில தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் புதையல் இருப்பதாக அரசுக்கும் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஒரு மாதமாக புதையலுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இதில் யானைகளின் தந்தம், குதிரைகளின் எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தங்களும், எலும்புகளும் எந்த காலத்தை சேர்ந்தவை என தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கிணறு வழியாக ஸ்கேனர் கருவிகளை கொண்டு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர். இதில் கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த தர்கா அருகே மலைப்பகுதியில் வைர மலை இருப்பது தெரியவந்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.