தலீபான்களுக்கு எதிராக, பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிரம்ப்..
ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் ஆம்புலன்ஸ் ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 158 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடைகள், சந்தைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் நடந்துள்ள இந்த தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், தலீபான் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாத அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தலீபான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தானை குறிப்பிட்டு டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள், பாகிஸ்தான் அளித்து வரும் அடைக்கலத்தினால் தலீபான் தீவிரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை வெற்றிகரமுடன் நடத்தி வருகின்றனர் என குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளன.
இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், தலீபான் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கும் ஹக்கானி அமைப்பு மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த பாதுகாப்பு உதவி நிதியான 200 கோடி அமெரிக்க டாலரை டிரம்ப் நிர்வாகம் இந்த மாதம் தற்காலிகம் ஆக நிறுத்தி வைத்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்