Header Ads

நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.. காரணம் என்ன தெரியுமா..?

மதுரை ஆதினம் வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றத்தை மதிக்காமல் இருப்பதற்கு நித்தியானந்தாவிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யாவிட்டால் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிப்பேன் என்று நீதிபதி கண்டித்துள்ளார். நித்தியானந்தா ஆசிரமத்துக்கு எதிராக பல புகார்கள் வருவதாக நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293வது மடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

இதற்கு நீதிபதி மகாதேவன், 292வது ஆதீனம் உயிருடன் இருக்கும் போது நீங்கள் புதிய ஆதீனமாக பொறுப்பேற்பது தவறு பதில் மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால் வழக்குக்கு பதில் தராமல் தொடர்ந்து நித்தியானந்தா வாய்தா வாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்தியானந்தா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார். நீதிமன்றத்தை மதிக்காமல் இருக்கும் நித்தியானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிடப்படும் என்றார்.  இதனையடுத்து நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர்
நீதிபதியிடம் அவகாசம் கேட்டதையடுத்து பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை நாளை மறுதினத்திற்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

நித்தியானந்தா சீடரிடம் போலீஸ் விசாரணை

உயர்நீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்திய நித்தி சீடர் நரேந்திரனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நிகழ்வுகளை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தார். நரேந்திரனைப் பிடித்து விசாரிக்க நீதிபதி மகாதேவன் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.