Header Ads

செக்ஸ் தொல்லையால், கல்லை தூக்கி ரவுடியை தலையில் போட்டுக் கொன்ற மனைவி..

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஆலஞ்சி சலேட் நகரைச் சர்ந்தவர் டென்சிலின் (வயது 42). இவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்பட பல வழக்குகள் உள்ளன. குளச்சல் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இவரது மனைவி சுனிதா (35). இவர்களுக்கு 13 மற்றும் 9 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை  மதியம் டென்சிலின் தனது வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். பெரிய கல்லை போட்டு அவரது தலை சிதைக்கப்பட்டு இருந்தது.

வெளியே சென்றிருந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது டென்சிலின் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் குளச்சல் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் அவரது மனைவி சுனிதா இல்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சுனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காலையில் டென்சிலின் செலவுக்கு ரூ.1000 பணம் கேட்டு தகராறு செய்ததாகவும், இதனால் அவரிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டதாகவும், இப்போது தான் வீட்டுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

டென்சிலின், அந்த பகுதியைச் சேர்ந்த பலருடன் விரோதத்தில் இருந்தார். இதனால் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால் அந்த எந்தவொரு உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் டென்சிலினின் மனைவி சுனிதாவின் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது. நேற்று முன்தினம்  மாலை சுனிதாவை பிடித்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் டென்சிலின் கொடுமை தாங்க முடியாமல் அவரை கொலை செய்ததாக சுனிதா ஒப்புக் கொண்டார்.

எனக்கு சொந்த ஊர் குலசேகரம் ஆகும். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவரை பிரிந்து இருந்த நான் டென்சிலினை காதலித்தேன். அதன்பிறகு டென்சிலினை நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலமும் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

திருமணத்துக்கு பிறகு டென்சிலினின் நடவடிக்கைகள் மாறின. சரியாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மேலும் திருட்டு, கொலை முயற்சி என ரவுடித்தனத்திலும் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை தேடி வருவதும், அவர் தப்பித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

இரவில் குடித்து விட்டு வரும் டென்சிலின் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். பக்கத்தில் குழந்தைகள் தூங்குவதையும் பொருட்படுத்தாமல் என்னிடம் அத்துமீறி நடந்து கொள்வார். மேலும் பணம் கேட்டும் என்னை அடித்து சித்ரவதை செய்வார்.

இப்படியே அவரது தொல்லைகள் எல்லை மீறின. அவரை கொன்று விட்டு நாம் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழலாம் என்று நான் பலமுறை நினைத்தது உண்டு. சம்பவத்தன்று காலை குடிக்க பணம் கேட்டு என்னிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் படுத்து உறங்கினார். இது தான் சரியான தருணம் என்று நினைத்த நான் வீட்டு அருகே கிடந்த பெரிய கல்லை தூக்கி அவரது தலையில் போட்டுக் கொன்றேன்.

ஆனால் காலையிலேயே கணவருடன் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி அவர்களை நம்பவைத்தேன். போலீசார் அதனை நம்பாமல் என்னிடம் விசாரித்து உண்மையை வாங்கி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சுனிதாவை போலீசார் கைது செய்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.