Header Ads

உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்த, உலகின் குள்ளமான இந்திய பெண்..

இந்தியாவின் நாக்பூர் நகரை சேர்ந்த பெண் ஜோதி ஆம்கே (வயது 25).  இவரது உயரம் 2 அடி மற்றும் 6 அங்குலம் (62.8 செ.மீ.).  இவர் உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்திருக்கிறார்.

இதேபோன்று துருக்கியை சேர்ந்தவர் சுல்தான் கோசென் (வயது 36).  8 அடி மற்றும் 9 அங்குலம் உயரம் கொண்டவர்.  உலகின் மிக உயர்ந்த மனிதரான இவரையும், ஆம்கேவையும் தங்களது நாட்டுக்கு வரும்படி எகிப்து அழைப்பு விடுத்தது.

எகிப்து நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி வாரியம் விடுத்த அழைப்பினை ஏற்று இருவரும் அங்கு சென்றனர்.

ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன.

கடந்த 2009ம் ஆண்டில் உலகின் உயர்ந்த மனிதரானார் கோசன்.  உலக வரலாற்றில் 8 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நபர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர்.  பிட்யூட்டரி சுரப்பியினால் அவர் அதிக வளர்ச்சியுடன் காணப்படுகிறார்.

இதேபோன்று அகண்டிரோபிளேசியா என மருத்துவ உலகில் அழைக்கப்படும் வியாதியினால் குள்ள வடிவத்தினை ஆம்கே பெற்றுள்ளார்.  அவர் 2 வயது குழந்தையின் சராசரி அளவை விட உயரம் குறைந்தவராக இருக்கிறார்.  ஆம்கே, பிக்பாஸ் மற்றும் அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக தோன்றிய படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு, டுவீட் செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.