பப்புவா நியூ கினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - 30 பேர் கதி என்ன?
ஆஸ்திரேலியாவிற்கு அருகிலும் தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவான பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் நேற்று முன்தினம் 7.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியைச் சுற்றிய பல இடங்களில் வீடுகள் குலுங்கின.
மெண்டி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாகவு,, 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தொலைபேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், கடற்படையினர் ஹெலிகாப்டரில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்