Header Ads

பள்ளி மாணவர்கள் 9 பேர் இறப்பு - பா.ஜ.க. பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்..

பீகாரில் பள்ளி மாணவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 24-ம் தேதி மதியம் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பிரதான சாலையில் இருந்து தாறுமாறாக வந்த கார் ஒன்று பள்ளிக்குள் புகுந்து மோதியதில் பல மாணவர்கள் சிக்கினர். 

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், பள்ளி மாணவர்கள் இறந்த விவகாரத்தில் தொடர்புடைய மனோஜ் பைதா 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.  

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்கள் மீது வேகமாக மோதிய கார் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.