Header Ads

காதலியுடன் வீடியோகால் பேசிக்கொண்டே, இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சிச் சம்பவம்..

பிகார் மாநிலம் பாட்னாவின் சாய்சக் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.ஏ.ஆகாஷ் குமார் (19). இவர் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டு படுக்கை அறையில் தலையில் குண்டு காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் அருகே கைத்துப்பாக்கியும் ஒரு வார இதழும் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆகாஷ் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் படிப்பில் ஆர்வம் காட்டாத அவர் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனால் ஆகாஷ் மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலியுடன் வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி உள்ளார். ஆனால் அவரது காதலி துப்பாக்கியை கீழே போடும்படி கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த ஆகாஷ் விரல் தற்செயலாக துப்பாக்கி ட்ரிகரில் பட்டதில் குண்டு ஆகாசின் தலையில் பாய்ந்துள்ளது. இதனால் அவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆகாஷின் உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது காதலி மற்றும் காதலியின் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராமல் நடந்த மரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.