Header Ads

இந்தியாவுக்கு சென்ற மஹிந்தவின் திட்டம் தோல்வி..

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காரில் திருப்பதி மலைக்கு புற்ப்பட்டு சென்றதோடு இன்றைய தினம் நாடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்திர ராஜ்பக்ச இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா நோக்கி அவசரமாக பயணமாகினார்.

பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையம் சென்றடைந்த அவர், விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

இருந்த போதிலும் இந்த நிகழ்ச்சி இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதால் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து விசேட வாகனமொன்றில் அவர் திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் மஹிந்த ராஜபக்சவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

திருப்பதி மலையில் வழிபாடுகளின் ஈடுபட்டதன் பின்னர் இன்று இரவு அவர் நாடு திரும்புவார் என்று ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்தனர்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 230 வரையிலான சபைகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.

இந்த வெற்றியானது தேசிய அரசிலுள்ள பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியதுடன், அக்கட்சிகளிடையே முரண்பாட்டிற்கும் வழிசெய்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்திலும், அதன் பின்னரும் இந்திய ஜோதிடம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது அதீத நம்பிக்கை உடையவராக இருக்கின்ற நிலையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காகவே இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.