Header Ads

ராக்கெட் போல, சாலையில் சீறிப்பாய்ந்த சிலிண்டரால் பரபரப்பு ..

சேலத்தை சேர்ந்தவர்கள் நீதிராஜா, மாதவன். இருவரும் சேலத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டறைக்கு தேவையான வாயு சிலிண்டர்கள் பட்டறை முன்பு வெளிப்பகுதியில் சாலை ஓரமாக வைக்கப்பட்டு இருந்தன.

பட்டறையில் பணிபுரிந்த ஊழியர் ரத்தினசாமி நேற்று முன்தினம் ஒரு சிலிண்டரை இயக்க முயன்றார். அப்போது திடீரென வால்வு திறந்து அதிக சத்தத்துடன் சாலையில் ராக்கெட் போல புகையை கக்கியபடி சிலிண்டர் சீறிப்பாய்ந்தது. சுமார் 100 அடி தூரம் பாய்ந்து சென்ற சிலிண்டர் அங்குள்ள வீட்டின் மீது மோதியது.

இதனால் அந்த வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல், சுற்றுச்சுவர் பலத்த சேதமடைந்தது. அப்போது சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் மற்றொரு சிலிண்டரில் வால்வு வழியாக வாயு கசிவு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சரி செய்தனர். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.