Header Ads

பிரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை..

பிரித்தானியாவில் தற்போது தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக  பயங்கரவாத ஒழிப்புப்பிரிவில் கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியா தற்போது ஒரு புதியவகை பயங்கரவாதத்தை எதிர்நோக்குவதாக அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை
நேற்று திங்கட்கிழமை அந்நாடடு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் உதவி ஆணையாளர் மார்க் ரொவ்லி இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 5 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களினால் பலர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் சுமார் 3 ஆயிரம் பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரித்தானியாவில் தற்போது தீவிர வலதுசாரி பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இவை மிகவும் சவாலானதாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பிரித்தானியாவில் நிலவும் தீவிர வலதுசாரி பயங்கரவாதம் தொடர்பாகப்  புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேசப் பயங்கரவாதிகளுடன் குறித்த வலது சாரிக் குழுக்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை. குறித்த வலது சாரிக் குழுக்களினால் நடத்தப்படவிருந்த 4 தாக்குதலுக்கான சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.