Header Ads

இது தான் லண்டனில் தற்போது நடக்கிறது: பிள்ளைகளை வெளியே அனுப்புவது எவ்வளவு ஆபத்து ?



லண்டனில் கத்தி குத்து கலாச்சாரம் தற்போது என்றும் இல்லாதவாறு பன் மடங்காக அதிகரித்துள்ளது என மெற்றோ பொலிடன் பொலிசார் அறிவித்துள்ளார்கள். பிரித்தானியாவில் பப் ஒன்றுக்கு வெளியே 16 வயது மதிக்க தக்க, பள்ளி மாணவர்கள் மூவர் இணைந்து. தனக்கு பிடிக்காத ஒரு மாணவனை சுவரோடு சாத்தி மிரட்டியுள்ளார்கள்.

மூன்றாவது மாணவன் தனது சிறிய கத்தி ஒன்றை எடுத்து 4 முறை அவரின் காலில் குத்தியுள்ளான். இவை அனைத்தும் அருகே இருந்த CCTV கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. காயமடைந்த மாணவனை மீண்டும் தாக்கியுள்ளார்கள். பின்னர் அவர் மற்றுமொரு நண்பரின் உதவியோடு அவ்விடத்தில் இருந்து நொண்டி நொண்டி சென்றுள்ளார்.

டீன் ஏஜ் சிறுவர்களை நடைட் அவுட் என்ற போர்வையில், தமிழர்கள் இரவில் வெளியே விடுவது. அல்லது நண்பர்களோடு இணைந்து இரவில் செல்வது என்பது மிக மிக ஆபத்தான விடையமாக மாறியுள்ளது. தமிழர்கள் தமது பிள்ளைகளை இப்படியான இடங்களில் வெளியே விடுவதை தவிர்ப்பது நல்லது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.