Header Ads

அதிரடி முடிவு- டீச்சர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி- பள்ளிகளில் இனி டீச்சர் கைகளில் துப்பாக்கி !



அமெரிக்க புளொரிடா மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். இதனை அடுத்து பெரும் களோபர நிலை தோன்றியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்துச் சென்று பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் சுடுவது என்பது எதோ றொட்டி சுடுவதைப் போல செய்கிறார்கள். நூற்றுக் கணக்கான சம்பவம் இத்தோடு நடந்தேறியுள்ள நிலையில். புளொரிடா வாழ் மக்கள், பெரும் போராட்டங்களை நடத்தி , அம் மாநிலத்தில் துப்பாக்கி தடை கொண்டுவரவேண்டும் என்று கோரினார்கள்.

இதனை மறுத்துள்ள அந்த மாநில சபை, துப்பாக்கி வங்கும் வயதை 18ல் இருந்து 21 டாக உயர்த்தியுள்ளதோடு. பள்ளிகளில் வேண்டும் என்றால் ஆசிரியர்கள் கைத் துப்பாக்கியை வைத்திருக்கலாம் என்ற ஒப்புதலை கொடுத்துள்ளது. எனவே இனி பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சகிதம் வந்து சூடு நடத்தினார், பொலிசார் வருவதற்கு முன்னரே அவரை கையாள ஒரு ஆசிரியர் அங்கே இருப்பார் என்பது அமெரிக்க மக்களை சற்று திருப்த்தியடைய வைத்துள்ளது. ஆனால் லண்டன் போன்ற நாடுகளில் இது மிகவும் வினோதமான விடையம் தான்.

அமெரிக்காவில் அதி நவீன ஆயுதமான M3, G3, தானியங்கி துப்பாக்கி. 9MM கைத் துப்பாக்கி ஏன் றொக்கட் லோஞ்சரை கூட கடைகளில் வாங்கலாம். அதுபோன ஸ்னைப்பர் துப்பாக்கிகள் கூட கடைகளில் கிடைக்கிறது. என்ன கொடுமையோ தெரியவில்லை. ஆளை ஆளை சுட்டுக் கொல்ல, துப்பாக்கிகளை பொதுமக்களுக்கு விற்க்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தை வகிக்கிறது. கேட்டால் இது தனி மனித சுதந்திரம் என்கிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.