Header Ads

இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில், குண்டு வெடித்ததால் பரபரப்பு..

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று இரவு RPG வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குப்பைகளுக்கு தீ வைக்கும் போது அதில் இருந்த இந்த குண்டு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பினால் அருகில் இருந்த பல வீடுகள் சேதடைந்துள்ள போதிலும், யாரும் காயமடையவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களினால் வீட்டு தோட்டம் ஒன்றில் காணப்பட்ட குப்பை மேட்டில் குப்பை சேகரித்து அதற்கு தீ வைத்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் பாரிய சத்தம் ஒன்று கேட்டுள்ள நிலையில் குண்டு வெடித்துள்ளது.

எப்படியிருப்பினும் குண்டு வெடிக்கும் சந்தர்ப்பத்தில் குப்பைக்கு தீ வைத்தவர் அங்கிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.



இரண்டாம் இணைப்பு..

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு! புலனாய்வாளர்கள் விசாரணை..


முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களிடம் இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் குப்பைக்கு தீ மூட்டும் போது குண்டு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.