Header Ads

வடகொரிய அதிபரின் சகோதரி பங்கேற்ற விருந்தை, புறக்கணித்த அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்..

தென்கொரியாவில் நேற்று தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வடகொரிய பாராளுமன்ற தலைவர் கிம் யாங் நம் தலைமையில் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோர் குழுவாக நேற்று சென்றிருந்தனர்.

பியூங்சங் நகரில் நேற்று நடந்த தொடக்க விழாவில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடக்க விழா மேடையில் கிம் யோ ஜாங் வந்த போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் கை குலுக்கு வரவேற்றார்.

அதிகார்ப்பூர்வமாக ஒலிம்பிக் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும் வானவெடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த காட்சியை கிம் யோ ஜாங்-கும், மைக் பென்ஸும் அருகருகே நின்று கண்டுகளித்தனர். இருந்தும் அவர்கள் எதுவும் பேசவில்லை.

நேற்று இரவு தென்கொரிய அதிபர் அளித்த இரவு விருந்தில் கிம் யோ ஜாங் பங்கேற்ற நிலையில், மைக் பென்ஸ் அதனை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.