Header Ads

லண்டன் தமிழனின் கழுத்தை வெட்டுவேன்: சைகை காட்டிய சிங்கள ராணுவ அதிகாரி- தூதுவர் முன்.. VIDEO



இலங்கையின் சுதந்திர தினமான நேற்று(4) லண்டனில் அதன் தூதுவராலயம் முன்பாக பெரும் ஆர்பாட்டத்தில் ஈழத் தமிழர்கள் ஈடுபட்டார்கள். அந்தவேளை சிங்கள தூதுவர் தனது சகாவோடு வெளியே வந்து பார்த்தார். அவரோடு நின்றிருந்த ராணுவ காவலாளி ஒருவர், கழுத்தில் தனது கையை வைத்து வெட்டுவது போல சைகை காண்பித்தார்.

அதாவது தமிழர்களின் தலை துண்டாடப்பட உள்ளதாக அவர், நேரடியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பிரித்தானிய மண்ணில் ஒரு நாட்டு தூதுவரலாயத்திற்கு வேலை பார்க்கும் நபர் ஒருவர் இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுவது மிகப் பாராதூரமான குற்றச் செயல் ஆகும். சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கலாமா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த வீடியோவை அதிர்வு இணையம் லண்டன் மெற்றோ பொலிடன் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளதோடு. இது குறித்து என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்ப உள்ளது. மேலும் பிரித்தானிய MP மார்களுக்கும் இந்த வீடியோ காண்பிக்கப்பட உள்ளது.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.