Header Ads

110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..

மத்தியப்பிரதேசத்தில் 110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 35 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தின் திவாஸ் நகரில் உமரியா கிராமத்தில் ஒரு பெற்றோர் நேற்று மதியம் வயல்வெளியில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்களது 4 வயது மகன் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளான். இதற்கிடையே சிறுவன் வயலில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

இதைக்கண்ட அவனது பெற்றோர் அலறினர். உடனடியாக இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். முதல் கட்டமாக, அவர்கள் 40 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனுக்கு சுவாசிக்க ஏற்ற வகையில் பிராண வாயுவை செலுத்தினர். தொடர்ந்து சிறுவனை மீட்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். 

சிறுவன் விழுந்த குழிக்கு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது.   இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் 110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 35 மணி நேரத்திறகு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான். அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.