Header Ads

வாலிபரை 20 முறை கத்தியால் குத்திய பெண்..

டெல்லி புறநகர் நிவாஸ் விகார் பகுதியை சேர்ந்த பெண் கமல்தீப்.

இவர் ஆன்லைன் கடை மூலமாக செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த செல்போன் பார்சலை கடை ஊழியர் கேசவ் தாமதமாக கொண்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கமல்தீப்பும், அவரது சகோதரர் ஜிதேந்தர் சிங்கும் பார்சல் கொண்டு வந்த அந்த வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தினர். 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தப்பட்டார்.


இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். கத்தி குத்தில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி கமல்தீப் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.