Header Ads

புட்டினுக்கு 24 மணி நேர கெடு கொடுத்துள்ள திரேசா மே- விளக்கம் சொல்ல கோரிக்கை விடுத்தார்..



பிரித்தானியாவில் வைத்து தஞ்சம் அடைந்த ரஷ்ய முன் நாள் உளவாளியை, ரஷ்ய புலனாய்வு துறை போட்டு தள்ள கடந்த வாரம் முயற்ச்சி செய்த விடையம் யாவரும் அறிந்ததே. "நொவிச் சொக்" என்று அழைக்கப்படும் ஒருவகையான நச்சு வாயுவை ரஷ்யாவில் இருந்து பிரிட்டன் கொண்டு வந்து. அதனை பிரித்தானியாவில் வைத்து பயன்படுத்தியுள்ளது ரஷ்யா.

இன்னும் 24 மணி நேரத்தில் இச்செயலுக்கான விளக்கத்தை தமக்கு தரவேண்டும் என ரஷ்யாவிடம் பிரித்தானிய பிரதமர் திரேசா மே கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்ய துணை தூதுவரை அழைத்து , இதற்கு புட்டின் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கடுமையாக கூறி அனுப்பியுள்ளார் பிரதமர். இதனை தாம் தமது நாட்டு அதிபரான புட்டினிடம் தாம் சொல்வதாக தூதுவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணத்தால் ராஜதந்திர மட்டத்தில் பிரிட்டம் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தற்போதும் பெரும் நெருக்கடியில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் தோன்றியுள்ளது.  

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.