Header Ads

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க 325 பேருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி..

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள 221 வீரர்-வீராங்கனைகள் உள்பட 325 பேர் கொண்ட இந்திய அணியினருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் பரிந்துரை செய்த பட்டியலில் இருந்து 2 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்துவின் தாயார் விஜயா, சாய்னா நேவாலின் தந்தை ஹர்விர் சிங் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்களது சொந்த செலவில் செல்கின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.