Header Ads

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா 3-வது திருமணம் செய்கிறார்..?

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. எனவே அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு  இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவை, கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரி லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கும் தொடுத்து உள்ளது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஜய் மல்லையா 3-வது திருமணம் செய்து கொள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது காதலி பிங்கி லல்வானியை விஜய் மல்லையா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. முன்னாள் விமானப் பணிப்பெண்ணான பிங்கி லல்வானி, விஜய் மல்லையாவுடன் மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

தற்போதும், லண்டனில் விஜய் மல்லையாவுடனே லல்வானி வசித்து வருகிறார்.  கடந்த பிப்ரவரியோடு இவர்கள் இருவரும் இணைந்து மூன்று வருடங்கள் ஆனதை மிகச் சிறப்பாக லண்டனில் மல்லையா கொண்டாடியதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் தான் பிங்கியையே திருமணம் செய்து கொள்ள மல்லையா முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகவே கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

விஜய் மல்லையா இதற்கு முன்பாக  ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்ணான சமீரா தைப்ஜீ என்பவரை 1986 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1987- விவாகரத்து பெற்ற விஜய் மல்லையா, 1993 ஆம் ஆண்டு ரேகா மல்லையா என்பவரை  திருமணம் செய்து கொண்டார். விஜய் மல்லையாவுக்கு சித்தார்த் மல்லையா என்ற மகனும் லியென்னா மற்றும் தன்யா என்ற மகள்களும் உள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.